கைரி :இருக்கும் இடத்தில் மகிழ்ச்சியாகவே இருக்கிறேன், நன்றி

அம்னோ ரெம்பாவ் எம்பி, கைரி ஜமாலுடின் அம்னோவைவிட்டு வெளியேறப் போவதில்லை என்று கூறியுள்ளார். பக்கத்தான் ஹரப்பானுடன் இணையுமாறு அழைப்பு விடுக்கப்பட்டதற்கு அவர் அளித்துள்ள பதில் அப்படித்தான் நினைக்க வைக்கிறது.

“இருக்கும் இடத்தில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்”, என்றவர் இன்று நாடாளுமன்றத்தில் தன்னைச் சூழ்த்து கொண்ட செய்தியாளர்களிடம் கூறினார்.

அப்படியானால் அழைப்பை நிராகரிக்கிறீர்களா என்று வினவியதற்கு சொன்ன பதிலையே மீண்டும் கூறினார் கைரி.

கைரிக்குப் பின்னர் இளைஞர், விளையாட்டமைச்சர் ஆன பெர்சத்துக் கட்சியின் சைட் சாதிக், தன்னுடடைய டிவிட்டர் பக்கத்தில் பெர்சத்து மிதவாத மலாய்க்காரர் கட்சி என்றும் அதில் வந்து சேர்ந்துகொள்ளும்படியும் அழைப்பு விடுத்திருந்தார். அது பற்றிக் கேட்டதற்குத்தான் கைரி அப்படிப் பதில் அளித்தார்.