அம்னோ மேலும் சில சொத்துகளை விற்கத் திட்டமிடுகிறது

பிப்ரவரி மாதம் மீடியா பிரிமா நிறுவனத்தில் தனக்கிருந்த பங்குகளை விற்ற அம்னோ அதனிடம் உள்ள பங்குகளில் மேலும் சிலவற்றை விற்பதெனத் தீர்மானித்துள்ளது.

இதை அதன் தலைமைச் செயலாளர் அனுவார் மூசா இன்று நாடாளுமன்ற வளாகத்தில் கூறினார்.

ஆனால், அது குறித்து மேல்விவரம் தெரிவிக்க அவர் மறுத்தார். அம்னோ பொருளாளர்தான் அதைத் தெரிவிக்க வேண்டும் என்றார்.

“அம்னோ அதன் பங்குகளை விற்பதற்கு ஏற்பாடுகள் செய்து வருகிறது என்று மட்டுமே என்னால் இப்போதைக்குக் கூற முடியும்”, என்றார்.