ஜோகூர், பாசிர் கூடாங்கில் இவ்வாரம் தொடங்கி 18 சட்டவிரோத தொழிற்சாலைகள் மூடப்படும்.
அங்கு சுமார் 250 தொழிற்சாலைகளைப் பரிசோதித்துப் பார்த்தபின்னர் அதிகாரிகள் அம்முடிவுக்கு வந்திருப்பதாக த மலேசியன் இன்சைட் ஜோகூர் சுற்றுச்சூழல் துறை (டிஓஎ) இயக்குனர் வான் அப்துல் லத்திப் வான் ஜப்பாரை மேற்கோள்காட்டிக் கூறியுள்ளது.
“வெவ்வேறு துறை அதிகாரிகளை அழைத்துச் சென்று சோதனை செய்கிறோம். இதுவரை மூன்று தொழிற்சாலைகளை மூடியிருக்கிறோம்,
“250 தொழிற்சாலைகளையும் பார்த்தாயிற்று என்றாலும் சோதனையிடும் பணி தொடரும்”, என்றாரவர்.