நீரில் டீசல் கொட்டப்பட்டது கீழறுப்பு வேலையா? போலீஸ் கண்டறிய வேண்டும்- அமைச்சர்

சுங்கை சிலாங்கூர் ஆற்றில் டீசல் எங்கிருந்து வந்தது என்பதை போலீஸ் கண்டறிய வேண்டும் . இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ள நீர், நிலம், இயற்கை வள அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயகுமார் அது ஒரு சதிநாச வேலையாக இருக்கலாம் என்று கருதுகிறார்.

“இது குறித்து சிலாங்கூர் மந்திரி புசார் அமிருடின் ஷாரியுடனும் கலந்து பேசினேன். மூன்று நாளில் இரண்டு முறை நீர் மாசடைந்ததைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது.

“ இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீசுடன் கலந்துரையாடி போலீஸ் விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

“இச்செயலுக்குப் பின்னணியில் இருப்பவர் கண்டுபிடிக்கப்பட்டு சட்டப்படித் தண்டிக்கப்பட வேண்டும்”, என்றவர் ஓர் அறிக்கையில் கூறினார்.