காட் எழுத்து அறிமுகத்தை இன விவகாரமாக்குவதே மகாதிர்தான் -மலாக்கா டிஏபி சாடல்

மலாக்கா டிஏபி, பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் டோங் ஸோங்கை “இனவாத அமைப்பு” என்று குறிப்பிட்டிருப்பதைத் திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியது. அதுதான் காட் விவகாரத்தை இன விவகாரமாக மாற்றி விட்டிருக்கிறது என்று அது சாடியது.

காட் எழுத்தை நான்காம் ஆண்டு பகாசா மலேசியா பாடத்தில் சேர்க்கும் திட்டத்தை அது ஒரு வகையில் “இஸ்லாத்தைப் புகுத்தும் முயற்சி” என்று சீனக் கல்வியாளர் அமைப்பு குறைகூறியிருந்ததை அடுத்து அது ஒரு இனவாத அமைப்பு என்று மகாதிர் வருணித்திருந்தார்.

“டோங் ஸோங்கை இனவாத அமைப்பு என்று மகாதிர் குறிப்பிட்டது ஒரு கல்வி விவகாரத்துக்கு இனச் சாயல் பூசப்பட்டு இன விவகாரமாக உருமாறியுள்ளது.

“பொதுமக்களுக்கு இது ஏமாற்றம் அளிக்கிறது. அவரது பேச்சு எங்களுக்கு ஏற்புடையதல்ல”, என்று மலாக்கா டிஏபி இன்று ஓர் அறிக்கையில் கூறியது.