பிரதமரின் ஆலோசகர்: வறுமை நிலையைப் பொறுத்தவரை உண்மையை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்

நாட்டின் வறுமை நிலவரத்தை அளவிட பொருளாதார அமைச்சு பயன்படுத்தும் அளவுகோல் காலத்துக்கு ஒவ்வாதது என்கிறார் பிரதமரின் பொருளாதார ஆலோசகர் முகம்மட் அப்துல் காலிட்.

“ஒரு புதிய அளவுகோல் வறுமை விகிதம் அதிக உயர்வாக உள்ளது என்று காண்பித்தால் அதற்காக நாம் ஆத்திரப்படக்கூடாது. அதுதான் உண்மை.

“ உண்மை நிலவரத்தை ஒப்புக்கொண்டாக வேண்டும். அப்போதுதான் அதற்குத் தீர்வு காண முடியும்”, என்று முகம்மட் தெரித்ததாக சினார் ஹரியான் கூறியது.

மலேசிய வறுமை விகிதம் அதிகாரத்துவ புள்ளிவிவரம் கூறுவதைக் காட்டிலும் அதிகம் என்று ஐநா வறுமை விகித ஆராய்ச்சி நிபுணர் பிலிப் அல்ஸ்டோன் ஆய்ந்து கூறியுள்ளதைப் பொருளாதார அமைச்சர் குறைகூறியிருப்பது குறித்து முகம்மட் கருத்துரைத்தார்.