இளைஞர், விளையாட்டு அமைச்சு சிங்க, கடல்நாக நடனங்கள் நடத்த அமைச்சின் அனுமதி பெற வேண்டியதில்லை என விளக்கமளித்துள்ளது.
சிங்க நடனம், கடல்நாக நடனம் எல்லாம் கலாச்சார நடவடிக்கைகள். அவை 1997 விளையாட்டு மேம்பாட்டுச் சட்டத்தின்கீழ் வரமாட்டா என்று அமைச்சு ஓர் அறிக்கையில் கூறியது.
சில தரப்புகள் சிங்க, கடல்நாக நடனங்களுக்கு அனுமதி பெறப்பட வேண்டும் என்று கூறியிருப்பதைத் தெளிவுபடுத்தவே அந்த அறிக்கை என்றும் அமைச்சு தெரிவித்தது.