அமைச்சரவையில் மாற்றத்தை ஏற்படுத்தினாலும், தனது அமைச்சரவையில் பி.கே.ஆர். தலைவர் அன்வார் இப்ராஹிம் அங்கம் வகிக்கமாட்டார் என்று பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது சூசகமாக தெரிவித்தார்.
“அமைச்சரவையின் (உறுப்பினர்களில்) எண்ணிக்கையில் எந்த மாற்றமும் அதிகரிப்பும் இல்லை.
“இராஜினாமா செய்ய விரும்புவதாக யாரும் கூறாததால், எங்களுக்குக் காலியிடம் இல்லை (அன்வாரை ஆதரிக்க),” என்று அவர் இன்று பிற்பகல் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
அமைச்சரவை இலாகாவை மாற்றுவது குறித்தும், அதிகார மாற்றத்திற்கான அழுத்தத்தின் போதும் அன்வரை அமைச்சரவையில் சேர அழைக்காதது குறித்து அவரிடம் கேள்விகள் கேட்கப்பட்டன.
கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி, பல தரப்பினரின், குறிப்பாக, உள்ளூர் ஊடகங்களில் வதந்திகள் பரவியதால், அமைச்சரவை மறுசீரமைப்பு இப்போதைக்கு இருக்காது என்று பிரதமர் அறிவித்தார்.
மாறாக, அமைச்சர்களிடையே இலாகாக்கள் மாற்றப்படலாம் என்று அவர் கூறினார்.
“போர்ட்ஃபோலியோவில் ஒரு சிறிய மாற்றம் இருக்கலாம். ஆனால், அதற்கு இன்னும் நேரம் வரவில்லை,” என்றார் அவர்.