கட்சிக் கூட்டங்களுக்கு வர வேண்டும்: அஸ்மினுக்கு அன்வாரின் கண்டிப்பான உத்தரவு

நீண்ட நாள்களாக கட்சிக் கூட்டங்களில் கலந்துகொள்ளாதிருக்கும் பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலிக்குக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் கண்டிப்பான உத்தரவு போட்டிருக்கிறார்.

“அவர் (அஸ்மின்) வேண்டுமென்றே (கூட்டங்களைப்) புறக்கணிக்கிறாரா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. எனக்குத் தெரிந்ததெல்லாம் அவர் கூட்டங்களுக்கு வரவில்லை என்பதுதான்.

“அதனால் அவருக்குக் கூறிக்கொள்ள விரும்புகிறேன் -இனி, கண்டிப்பாக வர வேண்டும்”, என்று அன்வார் கூறினார்.

அன்வார் இன்று மலேசிய அனைத்துலக இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தில் ஒரு நிகழ்வில் கலந்துகொண்டபோது செய்தியாளர்களிடம் பேசினார்.