புகைமூட்டம்: கிள்ளானில் மூன்று பள்ளிகள் மூடப்பட்டன

கிள்ளானில் ஜொஹான் சித்தியாவில் காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீட்டு எண்(ஏபிஐ) 200-ஐத் தாண்டியதால் மூன்று பள்ளிகள் இன்று மூடப்பட்டன.

ஸ்கோலா கெபாங்சான் (எஸ்கே) ஜொஹான் சித்தியா, எஸ்கே ஜாலான் கெபுன், ஸ்கோலா கெபாங்சான் , ஜாலான் கெபுன் ஆகியவையே அம்மூன்று பள்ளிகளாகும் என சிலாங்கூர் கல்வித் துறை ஓர் அறிக்கையில் கூறியது.

எந்தவொரு பள்ளியும் அது இருக்கும் பகுதியில் ஏபிஐ 200-யைத் தாண்டினால் நிலைமை சீரடையும்வரை பள்ளியை மூடி வைத்திருக்கலாம் எனக் கல்வித் துறை தெரிவித்தது.

“பள்ளி மூடப்படுவதால் பொதுத் தேர்வுகள் உள்பட பள்ளித் தேர்வுகள் பாதிக்கப்பட மாட்டா. அவை திட்டப்படி நடக்கும்” என்றும் கூறியது