டாக்டர் எம் : பெர்சத்து அம்னோவிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்

எதிர்காலத்தில், மக்களால் நிராகரிக்கப்படுவதைத் தவிர்க்க, அம்னோவிடம் இருந்து கற்றுக் கொள்ளுமாறு பெர்சத்து தலைவர் டாக்டர் மகாதீர் முகமது, இன்று கட்சி உறுப்பினர்களுக்கு நினைவூட்டினார்.

உண்மையில், ஒரு தொலைநோக்குடைய நாட்டுக்குத் தலைமையேற்க வேண்டுமாயின், கடந்த ஆண்டு அரசாங்கத்திலிருந்து வீழ்ந்த அம்னோவின் வீழ்ச்சிக்கான காரணங்களைப் பெர்சத்து கவனிக்க வேண்டும்.

அதேநேரத்தில், அம்னோ-பிஎன் பலவீனமே, இன்றைய இந்த வெற்றிக்கு காரணம் என்பதனையும் பெர்சத்து ஆதரவாளர்கள் உணர வேண்டும்.

“நாம் (பெர்சத்து) புதியவர்களாக இருந்தாலும், பழமையான கட்சியைத் தோற்கடிக்க முடிந்தது.

“நாம் வெற்றி பெற்றதற்கு, நமது பலம் அல்லது மக்களின் ஆதரவு மட்டும் காரணமல்ல, நமது எதிராளி (அம்னோ) பலவீனமாகவும் மக்களால் நிராகரிக்கப்பட்டதும் கூட காரணம்.

“அந்தக் கட்சியின் (அம்னோ) தலைவிதியிலிருந்து நாம் கற்றுக்கொள்ளலாம்,” என்றார் அவர்.

நேற்று, ஷா ஆலாமில், பெர்சத்துவின் மூன்றாம் ஆண்டு நிறைவையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு நிகழ்ச்சியில் மகாதிர் இவ்வாறு பேசினார்.