காற்றுத் தூய்மைக்கேடு மோசமாக உள்ள இடங்கள் தங்காக்கும் மலாக்காவும்

இன்று நண்பகல் வரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் ஜோகூர், தங்காக்கும் பண்டாராயா மலாக்காவும் மிக மோசமான காற்றுத்தூய்மைக் கேடுள்ள இடங்களாக தெரிய வருகின்றன. காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு (ஏபிஐ) தங்காக்கில் 254 ஆகவும் பண்டாராயா மலாக்காவில் 222 ஆகவும் இருந்தது.

நாடு முழுக்க மொத்தம் 68 இடங்கள் காற்றுத்தூய்மைக் கேட்டால் பாதிக்கப்பட்டுள்ளன.

கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகள் சரவாக்கும் தீவகற்ப மலேசியாவின் தெற்கு மாநிலங்களும் மேற்கு மாநிலங்களுமாகும்.

ஏபிஐ 0-50 ஆக இருந்தால் காற்று தரமாக உள்ளது என்று பொருள். 51-100 ஆக இருப்பது மிதமான நிலையைக் குறிக்கும். 101-200 ஆரோக்கியத்துக்கு ஏற்றதல்ல. 201-300 ஆரோக்கியதுக்கு மிகவும் ஏற்றதல்ல. 300க்குமேல் ஆரோக்கியத்துக்கு ஆபத்தானது.