செல்வாக்கு சரிந்துள்ள நிலையில் தஞ்சோங் பியாய் இடைத் தேர்தலில் களமிறங்குகிறது ஹரப்பான்

மக்களிடம் பக்கத்தான் ஹரப்பானுக்கு உள்ள செல்வாக்கு 37 விழுக்காடுதானாம். ஆகஸ்ட் மாதக் கருத்துக்கணிப்பு ஒன்று காண்பிக்கிறது. .

செல்வாக்கு இந்த அளவு சரிந்து போயுள்ள நிலையில் அது தஞ்சோங் பியாய் இடைத் தேர்தலில் களமிறங்குவதை எண்ணி கட்சியினர் கலக்கமடைந்துள்ளனர்.

மெர்டேகா மையம் மேற்கொண்ட ஒர் ஆய்வின் முடிவுகள் ஷா ஆலம் தங்குவிடுதி ஒன்றில் பக்கத்தான் ஹரப்பான் இரகசியக் கூட்டமொன்றில் வெளியிடப்பட்டது எப்படியோ ஊடகங்களுக்குக் கசிந்து விட்டது.

ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் அது உண்மைதான் என்பதை உறுதிப்படுத்தினார் ஆனால், மற்றவர்கள் “பேசுவதற்குத் தடையுத்தரவு” போடப்பட்டிருப்பதால் எதுவும் சொல்ல மறுத்தனர்.