மசீச பல்கலைக்கழகக் கல்லூரிக்கு 82விழுக்காடு நிதிக்குறைப்பு அநியாயம்: வீ கண்டனம்

மசீச தலைவர் வீ கா சியோங்,  2020  பட்ஜெட்டில்  மசீசவுக்குச் சொந்தமான துங்கு அப்துல் ரஹ்மான் பல்கக்லைக் கழகக் கல்லூரிக்கு   கொடுக்கப்பட்டு வந்த நிதியில் 81.8 விழுக்காடு குறைக்கப்பட்டிருப்பதைக் கண்டித்தார்.

துங்கு அப்துல் ரஹ்மான் பல்கலைக்கழகக் கல்லூரிக்கு கல்வி அமைச்சு வழக்கமாக ரிம5.5 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யும் என்று கூறிய வீ ,  2020 பட்ஜெட்டில் அது ரிம1 மில்லியனாகக் குறைக்கப்பட்டுள்ளது   என்றார்.

பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கீட்டைப் பெறும் அமைச்சு கல்வி அமைச்சுத்தான் இருந்தும் அப்பல்கலைக்கழகக் கல்லூரிக்கு மட்டும் நிதி குறைக்கப்பட்டுள்ளது.

மக்களவையில் பட்ஜெட்டைத் தாக்கல் செய்த நிதி அமைச்ச்ர் லிம் குவான் எங்குக்கு சீன ஏழை மாணவர்களின்பால்  கொஞ்சமும்  பரிவு கிடையாது என்று வீ சாடினார்.