மலேசியாவின் இரண்டாவது பறக்கும் கார் அடுத்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் வானில் பறக்கலாம் என்கிறார் தொழில்முனைவர் மேம்பாட்டு அமைச்சர் முகம்மட் ரெட்சுவான் முகம்மட் யூசுப். அது முதல் காரிலிருந்து முற்றிலும் மாறுபட்ட தொழில்நுணுக்கத்தைக் கொண்டிருக்கும்.
இப்போது அது ஐரோப்பாவில் உருவாக்கப்பட்டு வருவதாகவும் அடுத்த ஆண்டில் அதன் வெள்ளோட்டதை வைத்துக்கொள்வது குறித்து அதனை உருவாக்கிவரும் நிறுவனத்துடன் விவாதித்து வருவதாகவும் ரிட்சுவான் கூறினார்.
“இந்த இரண்டாவது வகை கார் புதிய தொழில்நுணுக்கத்தைக் கொண்டிருக்கும். அடுத்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் அதை வெள்ளோட்டம் விட முடியுமா என்று ஆராய்ந்து வருகிறோம்”, என அமைச்சர் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் கூறினார்.