பள்ளியில் தொல்லைக்கு உள்ளான ஓராங் அஸ்லி மாணவர் மருத்துவமனையில்

நெகிரி செம்பிலானில் தங்கும் வசதிகொண்ட ஒரு பள்ளியில் மூத்த மாணவர்களின் அடாவடித்தனத்துக்கு ஆளான ஓராங் அஸ்லி மாணவர் ஒருவர் மருத்துவமனையில் சேர்க்க்கப்பட்டதாக போலீசார் கூறினர்.

தொடக்க விசாரணையில், அந்த 13-வயது மாணவர் இவ்வாண்டு தொடக்கத்தில் ஸ்கோலா மெனெங்கா சயின்ஸ் ரெம்பாவில் முதல் படிவத்தில் சேர்ந்த நாளிலிருந்தே மூத்த மாணவர்களின் அடாவடித்தனத்துக்கு ஆளாகி வந்தது தெரிய வந்திருப்பதாக போலீஸ் தெரிவித்தது.

வெளியில் தெரியாமல் இருந்த அவ்விவகாரம் மாணவரின் தந்தை அவரைப் பார்ப்பதற்குப் பள்ளிக்கு வந்தபோதுதான் வெளிச்சத்துக்கு வந்தது என்று ரெம்பாவ் மாவட்ட போலீஸ் தலைவர் அனுவார் பக்ரி அப்துல் சலாம் கூறினார்.