ஜெராம் சட்டமன்ற உறுப்பினர் முகம்மட் ஷாயிட் ரோஸ்லி பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டைக் குறைகூறிய டிஏபி சட்டமன்ற உறுப்பினர் ரோன்னி லியுவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க விரும்புகிறார். எதிர்ப்பை வெளிப்படுத்த ஒரு வினோதமான முறையை அவர் தேர்ந்தெடுத்துள்ளார்.
சிலாங்கூர் மாநிலச் சட்டமன்றக் கூட்டத்தின்போது எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து தன் எதிர்பபைக் காட்ட விரும்புகிறார் அவர். அதற்கு அவைத் தலைவரின் அனுமதியை நாடியுள்ளார்.
“அனுமதி கேட்டு கடிதம் எழுதி விட்டேன்”, என்றாரவர்.
அதற்காக தான் அம்னோவில் சேர்வதாக யாரும் நினைத்துவிடக் கூடாது என்றவர் சொன்னார்.
“அம்னோவில் சேரவில்லை. எதிர்ப்பைக் காட்டும் அடையாளமாகத்தான் எதிரணி வரிசையில் அமர விரும்புகிறேன்”, என்று ஷாயிட் கூறினார்.
சிலாங்கூர் சட்டமன்றம் நவம்பர் முதல் நாள் கூடுகிறது.
நீ ஒக்காந்த எடத்திலேர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கலாமே? இது புதுமையா ஒனக்கு?