2012க்கும் 2017க்குமிடையே மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வு பதின்ம வயதினரிடையே தற்கொலை செய்துகொள்ளும் எண்ணங்கள் பெருகி வருவதைக் காட்டுகிறது என்கிறார் சுகாதார துணை அமைச்சர் டாக்டர் லீ பூன் சை.
“13க்கும் 17 வயதுக்கும் இடைப்பட்டவரிடையே மேற்கொள்ளப்பட்ட அந்த ஆய்வில் 2017-இல் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் கொண்டோர் எண்ணிக்கை அதிகரித்திருந்தது. அது 10 விழுக்காடாக இருந்தது. 2012-இல் அந்த எண்ணிக்கை 7.9 விழுக்காடாக இருந்தது”, என்று லீ இன்று மக்களவையில் கேள்வி நேரத்தின்போது கூறினார்.