மலேசிய சட்டத்தின் பிடியிலிருந்து தப்பியோடிக் கொண்டிருக்கும் தொழில் அதிபர் ஜோ லோவுக்குச் சொந்தமாக லண்டனில் உள்ள பெண்களின் உள்ளாடை தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலகக் கட்டிடம் ஏலத்துக்கு விடப்படும்.
1எம்டிபிஇலிருந்து முறைகேடாக பெறப்பட்ட பணத்தைக் கொண்டு வாங்கப்பட்ட சொத்துகளைத் தேடும் அமெரிக்க (சட்டத்துறை) அதிகாரிகள் கட்டிடத்தை விற்பதற்கு ஏற்பாடுகளைச் செய்து வருகிறார்கள்.
அமெரிக்க சட்டத் துறை(டிஓஜே) அக்டோபர் 23-இல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள மனு ஒன்று மலேசியகினியின் பார்வையில் பட்டது. அதில், லண்டன் மேஃபேர் மாவட்டத்தில் உள்ள பல சொத்துகளின் விற்பனையை நிறுத்திவைத்துள்ள நீதிமன்ற ஆணையை நீக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
அக்கட்டிடம் 2014-இல் £42 (RM227) மில்லியனுக்கு வாங்கப்பட்டதாக ப்லும்பெர்க் கூறியது.
அதை ஜோ லோவுக்குச் சொந்தமான பெண்கள் உள்ளாடை தயாரிப்பு நிறுவனமான மைலா தலைமை அலுவலகமாக பயன்படுத்தி வந்தது. அது 1எம்டிபி பணத்தில் வாங்கப்பட்ட சொத்துகளில் ஒன்று என டிஓஜே கூறுகிறது.