மலாக்கா பெர்சத்துத் துணைத் தலைவர் முகம்மட் ரஃபிக் நைஸாமொஹிடீன், தான் மாநில அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துப் பேசியது உண்மைதான் ஆனால், அது புதிய மாநில அரசு அமைப்பதற்கு அல்ல என்கிறார்.
மாநில மேம்பாட்டுக்காக ஒத்துழைக்கும் உணர்வுடன்தான் அச்சந்திப்பு நிகழ்ந்தது என்று மலாக்கா ஆட்சிமன்ற உறுப்பினருமான அவர் தெரிவித்தார்.
“இம்மாத முற்பகுதியில் நடந்த மலாய் தன்மான மாநாடுதான் இனத்துக்காகவும் சமயத்துக்காகவும் நாட்டு நலனுக்காகவும் வெவ்வேறு சித்தாந்தன்ங்களைக் கொண்ட கட்சிகளும் ஒன்றாக அமர்ந்து பேச்சு நடத்த வழி அமைத்துக் கொடுத்தது.
“அரசாங்கக் கட்சி ஒன்றின் தலைவர் எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் பேச்சு நடத்துவதைப் புதிய அரசாங்கம் அமைக்கும் முயற்சி என்று எண்ணிவிடக் கூடாது”, என ரஃபிக் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.