எல்டிடிஇ விவகாரம்: பதின்மர்மீது இன்று குற்றச்சாட்டு

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் (எல்டிடிஇ) தொடர்பு வைத்துள்ளதாக இன்று குற்றஞ்சாட்டப்படவுள்ள பத்துப் பேரில் ஒருவர் ஏ.கலைமுகிலன்.

எல்டிடிஇ தொடர்பு வைத்துள்ளார் என்ற சந்தேகத்தின்பேரில் அக்டோபர் 10-இல் 2012 பாதுகாப்புச் சட்ட(சோஸ்மா)த்தின்கீழ் கைது செய்யப்பட்ட ஒரு வியாபாரியான கலைமுகிலன், 29, இன்று காலை செலாயாங் நீதிமன்றத்துக்குக் கொண்டுவரப்பட்டார்.

அவர்மீது பயங்கரவாதக் குற்றச்சாட்டு சுமத்தப்படலாம் என்று அவரின் வழக்குரைஞர் வி.யோகேஸ் கூறினார்.

இதே குற்றச்சாட்டின்கீழ் கோலகங்சார் நீதிமன்றத்தில் இருவரும் சிகாமாட்டில் ஒருவரும், சிப்பாங் நீதிமன்றத்தில் ஒருவரும் குற்றம் சாட்டப்படுகின்றனர்.

அதேவேளை சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் பி.குணசேகரன், காடெக் சட்டமன்ற உறுப்பினர் ஜி.சாமிநாதன் ஆகிய இருவர்மீதும் பட்டவொர்த், ஆயர் குரோ நீதிமன்றங்களில் குற்றம் சாட்டப்படுகிறது.

எல்டிடிஇ-யுடன் தொடர்பு வைத்துள்ளார்கள் என்ற சந்தேகத்தின்பேரில் கடந்த மாதம் கைது செய்யப்பட்டவர்கள் 12 பேர்.

அவர்களில் மேலும் இருவர் அக்டோபர் 31 வியாழக்கிழமை கோலாலம்பூரில் குற்றம் சாட்டப்படுவார்கள் எனத் தெரிகிறது.