இன்று காலை செலயாங் செஷன்ஸ் நிதிமன்ற வளாகத்தில் எம். தமிழ்மலர் தன் கணவர் கலைமுகிலன் செயலற்றுப்போன தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்புள்ள பொருள்களை வைத்திருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுப் பிணையும் மறுக்கப்பட்டதைக் கேட்டுக் கதறி அழுதது மனத்தை உருக்கியது.
இனி கலைமுகிலன் அவரது வழக்கு டிசம்பர் 16-இல் விசாரணைக்கு வரும்வரையில் போலீஸ் காவலில்தான் இருக்க நேரும் என்று தமிழ்மலர் செய்தியாளர்களிடம் கண்கலங்கக் கூறினார்.
சோஸ்மா சட்டத்தின்கீழ் கடந்த மாதம் கைதான கலைமுகிலன் 19 நாள்கள் விசாரணையின்றித் தடுத்து வைக்கப்பட்டு இன்று நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுக் குற்றஞ்சாட்டப்பட்டார்.
கெப்போங் பிகேஆர் உறுப்பினரான தன் கணவர் ஒரு நிரபராதி என்று தற்காத்துப் பேசிய தமிழ்மலர் கட்சித் தலைவர்கள் அவருக்காக பேச வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.