மலேசிய- தாய்லாந்து எல்லையில் அமைந்துள்ள போலீஸ் சோதனைச் சாவடிமீது பட்டாசு கொளுத்திப்போட்டுத் தாக்குதல் நடத்தியவர்களை போலீஸ் விரைவில் அடையாளம் காணும்.
விசாரணை நடந்து வருகிறது. அவசரப்பட்டு யாரையும் குற்றஞ்சாட்டி விட முடியாது என்று துணை இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீஸ் மஸ்லான் மன்சூர் கூறினார்.
இரவு மணி 11-க்கும் பின்னிரவு மணி 1-க்குமிடையில் நான்கு பட்டாசுகள் சோதனைச் சாவடிமீது வீசி எறியப்பட்டன. தாய்லாந்து கும்பல் ஒன்றுதான் பட்டாசுகளைக் கொளுத்திப் போட்டது என்று நம்பப்படுகிறது.
“சம்பவம்மீது விசாரணை நடக்கிறது. தாய்லாந்துக்காரர்களையோ வேறு யாரையோ குற்றம் சொல்வது சரியல்ல. சம்பவம் நடந்தது உண்மை”, என்று மஸ்லான் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.