பெர்லிஸ் அரசு பாஸ் கட்சிக்கு எக்ஸ்கோ பதவி கொடுக்க முன்வந்ததாம். பாஸ் துணைத் தலைவர் துவான் இப்ராகிம் கூறினார்.
ஆனால் பாஸ் அதை ஏற்பதில்லை என முடிவு செய்தது.
“பெர்லிசிஸ் எக்ஸ்கோவில் ஒரு இடம் காலியாக இருந்தது. அதை எங்களுக்குக் கொடுக்க முன்வந்தது பெர்லிஸ் அரசு. ஆனால் பாஸ் பணிவுடன் அதை மறுத்து விட்டது.
“பெர்லிஸ், பகாங் அரசுகள் கிளந்தானிலும் திரெங்கானுவிலும் எங்கள் கொள்கைகளை ஆதரிப்பதுபோல் நாங்களும் அவர்களின் கொள்கைகளை ஆதரிப்போம்”, என்றவர் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் கூறினார்.