தஞ்சோங் பியாய் இடைத் தேர்தலில் பாரிசான் நேசனல் (பிஎன்) வேட்பாளரான மசீச கட்சியின் வீ ஜெக் செங்- குக்கு பாஸ் ஆதரவு தெரிவித்துள்ளது.
“நவம்பர் 16 இடைத் தேர்தலுக்கான பிஎன் வேட்பாளராக வீ ஜெக் செங் நியமிக்கப்பட்டிருப்பதை பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங் வரவேற்கிறார் என்பதை இதன்வழி உறுதிப்படுத்துகிறேன்”, என்று அதன் தலைமைச் செயலாளர் தகியுடின் ஹசான் தெரிவித்தார்.
ஆதரவுக்கு அடையாளமாக வரும் சனிக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்யப்படும்போது அந்த இஸ்லாமியக் கட்சியின் உயர் தலைவர்களும் அதில் கலந்து கொள்வார்கள்.