மசீசவுக்கு வாக்களிப்பது சீன விற்பனையாளரிடம் மலாய்ப் பொருளை வாங்குவது போன்றது- பாஸ் கெடா

கெடா மாநில பாஸ் ஆணையர் அஹ்மட் யஹ்யா எதிர்வரும் தஞ்சோங் பியாய் இடைத் தேர்தலில் பாஸ் பிஎன் வேட்பாளர் வீ செக் செங்குக்கு ஆதரவளிப்பதை நியாயப்படுத்திப் பேசினார்.

“தஞ்சோங் பியாயி-இல் மசீசவின் சீன வேட்பாளருக்கு வாக்களிப்பது சீன விற்பனையாளரிடம் மலாய்- முஸ்லிம் பொருள்களை வாங்குவது போன்றது.

“விற்பனையாளர் சீனர் (மசீச) என்றாலும் பொருளுக்குச் சொந்தக்காரர்கள் மலாய்க்காரர்கள் முஸ்லிம்கள்(அம்னோ-பிஎன்)”, என அஹமட் நேற்றிரவு முகநூலில் பதிவிட்டிருந்தார்.

இது, மலாய்-முஸ்லிம் பெயரை வைத்துக்கொண்டுள்ள ஒருவர் (பெர்சத்து) விற்பனை செய்யும் முஸ்லிம் -அல்லாதவர்களின்(டிஏபி) பொருள்களை வாங்குவதைவிட மேலானது என்றாரவர்.