ஹுலு லங்காட். கேஎல் பகுதிகளில் குடிநீர் விநியோகம் ஞாயிற்றுக்கிழமை வழக்க நிலைக்குத் திரும்பும்

சுங்கை லங்காட் நீர் சுத்திகரிப்பு ஆலையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சிலாங்கூரின் ஹுலு லங்காட்டிலும் கோலாலும்பூரில் சில பகுதிகளிலும் தடைப்பட்டுள்ள குடிநீர் விநியோகம் நாளை வழக்க நிலைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீர் சுத்திகரிப்பு ஆலையின் வடிகட்டும் முறையில் ஏற்பட்ட பிரச்னை நேற்றே பழுதுபார்க்கப்பட்டு விட்டதாக ஆயர் சிலாங்கூர் சென். பெர்ஹாட் ஓர் அறிக்கையில் கூறியது.

இதன் தொடர்பில் மேல்விவரம் வேண்டுவோர் ஆயர் சிலாங்கூர் கைபேசி செயலி மூலம் அல்லது www.airselangor.com மூலம் தகவல்கள் பெறலாம்.