வாடகை மோட்டார்-சைக்கிள் சேவைக்கு அனுமதி

2020 ஜனவரியிலிருந்து இந்தோனேசியாவின் கொஜெக்கும் உள்நாட்டு நிறுவனங்களின் டெகோ ரைட்டும் வாடகை மோட்டார்-சைக்கிள் சேவை நடத்த அனுமதிக்கப்படும்.

ஆறு மாதகாலத்துக்குப் பரிட்சார்த்த அடிப்படையில்  அச்சேவை நடைபெறும் எனப் போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லொக் சியு பூக் கூறினார்.

“பொதுப் போக்குவரத்துக்கு முறையில் வாடகை மோட்டார்-சைக்கிள் சேவைக்கும் முக்கிய இடமுண்டு. அது பயணத்தின் தொடக்கத்திலும் முடிவிலும் ஒரு இணைப்புச் சேவையாக விளங்கும்”, என்று லோக் நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது கூறினார்.

அது கிள்ளான் பள்ளத்தாக்கில் மட்டும் ஒரு முன்னோடித் திட்டமாக தொடங்கப்படுகிறது. தேவை இருப்பின் அதை மற்ற பகுதிகளுக்கும் விரிவுபடுத்துவது பற்றி ஆராயப்படும் என்றாரவர்.