ஊடகத் துறையில் மாற்றங்கள் ஏற்பட்டுவரும் வேளையில் தேசிய செய்தி நிறுவனமான பெர்னாவும் அரசுக்குச் சொந்தமான ஒலி/ஒளிபரப்பு நிறுவனமான ஆர்டிஎம்-மும் அதிலிருந்து விலகி இருக்க முடியுமா? அவையும் சீரமைக்கப்பட்டு வருவதாகக் கூறுகிறார் தகவல், பல்லூடக அமைச்சர் கோபிந்த் சிங் டியோ.
சீரமைப்புச் செய்யப்படும் வேளையில் ஆள்குறைப்பு இருக்காது என்றும் அவர் சொன்னார்.
“உலக முழுவதிலும் ஊடகத் துறை மாற்றம் கண்டு வருவதைப் பார்க்கிறோம்…..தொழில்நுட்பம்சார்ந்த ஊடகங்களை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம். அது பாரம்பரிய அச்சு ஊடகம்மீது கடும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
“எனவே, பாரம்பரிய ஊடகங்கள் அவற்றின் வணிக மாதிரிகளை மாற்றிக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. எது எப்படியோ, மாற்றம் வணிக ரீதியில் வெற்றிகரமாக அமையுமா என்பதுதான் முக்கியம்”, என்றாரவர்.