இடைத் தேர்தல்: மசீச செராமாவுக்குச் சேரும் கூட்டம் ஹரப்பான் செராமாவுக்குக் கூடுவதில்லை

தஞ்சோங் பியாய் இடைத் தேர்தல் பிரச்சார வேலைகள் இரண்டாம் வாரத்துக்குள் அடியெடுத்து வைக்கின்றன.

நேற்று மசீச தேர்தல் பிரச்சாரக் கூட்டம் பெக்கான் நானாஸ் மார்க்கேட்டுக்கு முன்புறம் நடந்தது. அதற்கு ஆறு-நிமிடத்தில் நடந்து செல்லக்கூடிய தூரத்தில் ஹரப்பான் கூட்டம் யு மிங் சீனப் பள்ளிக்கு முன்புறம் நடந்தது.

மசீச கூட்டத்துக்குச் சுமார் 600 பேர் வந்திருந்தனர். அவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் கட்சி சீருடையில் இருந்தனர். கட்சித் தலைவர் வீ கா சியோங், துணைத் தலைவர் மா ஹாங் சூன், இளைஞர் தலைவர் நிக்கோல் வொங் முதலானோர் அதில் உரையாற்றினார்கள்.

ஹரப்பான் கூட்டத்தில் பெரும் புள்ளிகள், லிம் கிட் சியாங், லிம் குவான் எங், பெர்சத்து துணைத் தலைவர் முக்ரிஸ் மகாதிர் போன்றோர் பேசினார்கள். ஆனால், கூட்டம் குறைவு. சுமார் 300 பேர்தான் திரண்டிருந்தனர்.