இப்ராகிம் அலி: தாய்மொழிப் பள்ளிகள் இருக்கத்தான் வேண்டுமா ? நீதிமன்றங்கள் முடிவு செய்ய வேண்டும்

பார்டி பூமிபுத்ரா பெர்காசா மலேசியா(புத்ரா) தலைவர் இப்ராகிம் அலி, மலேசிய ஒற்றுமைக்குத் தடையாக உள்ள தாய்மொழிப் பள்ளிகள் தொடர்பான சர்ச்சைக்கு நீதிமன்றங்கள் தீர்வு காண வேண்டும் என்கிறார்.

“நீதிமன்றங்கள் இவ்விவகாரத்துக்கு முடிவுகட்டும் நேரம் வந்து விட்டது என்று நினைக்கிறேன்”, என இப்ராகிம் அலி கூறினார்.

தாய்மொழிப் பள்ளிகள் தொடர்ந்து இருப்பதுவும் அவற்றில் தாய்மொழிகள் பயிற்றுமொழிகளாக இருப்பதுவும் தேசிய நலனுக்கு ஏற்றதல்ல. அவை எல்லா இனங்களையும் சேர்ந்த பிள்ளைகள் ஒன்றுபடுவதற்குத் தடங்கலாக உள்ளன என்றாரவர்.