தஞ்சோங் பியாய்:  முன்கூட்டியே வாக்களிப்பு தொடங்கியது

தஞ்சோங் பியாய்  இடைத் தேர்தலில் 280 போலீஸ் வீரர்கள் முன்கூட்டியே வாக்களிப்பதற்காக இன்று ஒரு வாக்களிப்பு மையம் திறக்கப்பட்டது.

தஞ்சோங் பியாய் நாடாளுமன்றத் தொகுதியில் இரண்டு சட்டமன்றத் தொகுதிகள் அடக்கம்- ஒன்று, பெக்கான் நானாஸ், இன்னொன்று குக்குப்.

பெக்கான் நானாஸ் போலீஸ் தலைமையகத்தில் அமைந்துள்ளது வாக்களிப்பு மையம்.

முன்கூட்டி வாக்களிக்கப்படுவதைப் பார்வையிட பார்வையாளர்களும் வேட்பாளர்களின் முகவர்களும் அனுமதிக்கப்பட்டனர்.

தேர்தல் ஆணையம் இந்த வாக்களிப்பை அதன் முகநூல் பக்கத்திலும் நேரடியாக ஒளிபரப்புகிறது.

வாக்குகள் சனிகிழமை மற்ற வாக்குகளுடன் சேர்த்து எண்ணப்படும். அதுவரை போலீஸ் தலைமையக லாக் அப்பில் பாதுகாப்பாக வைக்கப்படும்.