பிகேஆர் இளைஞர் பிரிவு ‘சிறுபிள்ளைத்தனமாக’ நடந்து கொள்ளக்கூடாது- முன்னாள் தலைவர் கண்டனம்

பிகேஆர் இளைஞர் பிரிவு, கட்சி நடைமுறைகளைப் புறக்கணிக்கப்பதன்வழி கட்சித் தலைவர் அன்வார் இப்ராமிக்கும் துணைத் தலைவர் அஸ்மின் அலிக்குமிடையிலான பூசலை அதிகப்படுத்தும் நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

அதற்குப் பதிலாக, உள்சண்டையால் பிளவுபட்டிருக்கும் கட்சியில் ஒற்றுமையை நிலைநாட்ட இளைஞர் பிரிவு “நடுவர் பணி” ஆற்றலாம் என்று அதன் முன்னாள் தேசிய இளைஞர் துணைத் தலைவர் டாக்டர் அஃபிப் பஹார்டின் வலியுறுத்தினார்.

கட்சி நடைமுறைப்படி அடுத்த மாதம் மலாக்காவில் நடைபெறும் இளைஞர், மகளிர் ஆண்டுக் கூட்டத்தை அஸ்மின்தான் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைக்க வேண்டும் ஆனால் அவருக்கான அழைப்பு மீட்டுக்கொள்ளப்பட்ட விவகாரம் தொடர்பில் டாக்டர் அஃபிப் அவ்வாறு கூறினார்.