பிஎன் இளைஞர் பிரிவு ‘நல்லிணக்கக் கலந்துரையாடலை’த் தொடங்கும்

பிஎன் இளைஞர் பிரிவு எல்லா இனங்களையும் பாதிக்கும் எளிதில் உணர்ச்சி வசப்பட வைக்கும் விவகாரங்களை விவாதிக்க ஒரு தளம் அமைக்கப்போவதாக அதன் தலைவர் அஷ்ரப் வாஜ்டி டுசுகி கூறினார்.

“நல்லிணக்கக் கலந்துரையாடல்” என்று அழைக்கப்படும் அதில் பிஎன் இளைஞர் தலைவர்கள் மனம்விட்டுப் பேசுவதற்குத் தயாராக இருக்க வேண்டும் என்றவர் கேட்டுக்கொண்டார்.

எலிதில் உணர்ச்சிவசப்பட வைக்கும் இன விவகாரங்களை மூடிமறைக்காமல் .நேர்மையாகவும் மனம் விட்டும் விவாதிப்பதுதான் நல்லது என்று அஷ்ரப் கூறினார்.