அன்வாருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானமா? அப்படி எதுவும் இல்லை- பிகேஆர் தொடர்புத் தலைவர்

பிகேஆர் காங்கிரசில் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்படலாம் என்பதை கட்சியின் தொடர்புப் பிரிவு இயக்குனர் ஃபாஹ்மி பாட்சில் மறுக்கிறார்.

மேலும், பிகேஆர் தேசிய காங்கிரசுக்கான தீர்மானங்களைச் சமர்ப்பிக்க வேண்டிய காலம் முடிந்து விட்டதாகவும் அவர் சொன்னர்.

“தீர்மானங்களை ஒழுங்குப்படுத்தும் குழுவில் நானும் இருக்கிறேன். நம்பிக்கையில்லா வாக்களிப்பு தொடர்பான எந்தவொரு தீர்மானமும் எங்கள் பார்வைக்கு வரவில்லை”, என லெம்பா பந்தாய் எம்பியுமான அவர் இன்று காலை நாடாளுமான்ற வளாகத்தில் தெரிவித்தார்.