சுற்றுலா, கலை, பண்பாட்டு அமைச்சு, 2019 மலேசியா பச்சைக்குத்துக் கண்காட்சியில் மாடல் அழகிகள் அரைநிர்வாணக் கோலத்தில் உலா வந்ததாகக் கூறப்படுவது உண்மையா என்பதைக் கண்டறியும்படி உத்தரவிட்டுள்ளது.
அமைச்சர் முகம்மடின் கெதாபி, இதற்குமுன் பச்சைக்குத்துக் கண்காட்சிகள் சாபாவில் நடந்திருப்பதாகவும் அங்கு இப்படி நடந்ததில்லை என்றும் கூறினார்.
“கண்காட்சி பொதுவில் அல்லாமல் மறைவில்தான் நடத்தப்பட்டுள்ளது . என்றாலும் நடத்தைநெறி மீறப்பட்டுள்ளதே.
“அனைத்துலகக் கண்காட்சிகள் நடத்தப்படுவது சுற்றுலாத் தொழிலுக்கு நல்லதுதான். ஆனால், அது மலேசியாவின் மெய்யான தோற்றமான நன்னடத்தை, கண்ணியம் ஆகியவற்றைக் காண்பிக்கவில்லையே”, என்றவர் ஓர் அறிக்கையில் கூறினார்.
35க்கு மேற்பட்ட நாடுகள் கலந்துகொண்ட மலேசிய பச்சைக்குத்துக் கண்காட்சி கோலாலும்பூர் மாநாட்டு மையத்தில் நவம்பர் 29-இலிருந்து டிசம்பர் 1வரை நடந்தது.
இது போன்ற அரை நிர்வாண பச்சைக்குத்து கண்காட்சி தேவை தானா? நமது மாட்சிமை தங்கிய பேரரசியார் இதனை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளர்கள்
இது போன்ற அரை நிர்வாண பச்சைக்குத்து கண்காட்சி தேவை தானா? நமது மாட்சிமை தங்கிய பேரரசியார் இதனை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளர்கள்