பொறுமை இழந்து வருவதாகக் கட்சியில் உள்ள எதிர்ப்பாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம், கட்சியை உடைக்கவும் பலவீனப்படுத்தவும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
நேற்று பேராக் பிகேஆர் ஆண்டுக்கூட்டத்தில் கலந்துகொண்ட அன்வார், கட்சி உறுப்பினர்களுக்குக் கருத்துச் சொல்லும் உரிமை உண்டு என்ற காரணத்தால் தாம் இதுவரை பொறுமை காத்து வந்ததாகக் கூறினார்.
“என் பொறுமை கட்சி பிளவுபட்டுள்ளதாகவும் பலவீனமடைந்திருப்பதாகவும் ஒரு தோற்றப்பாட்டை ஏற்படுத்தி இருக்குமானால் அதன்பிறகு நான் சும்மா இருக்க மாட்டேன்.
“கட்சித் தலைவராக உள்ளவரை கட்சியின் வலுப்படுத்துவதும் அடிநிலை உறுப்பினர்களின் குரலுக்குச் செவிசாய்ப்பதும் என் கடமையாகும்”, என்றாரவர்.