நாளை மக்களவையில் சுஹாகாம் அறிக்கை தாக்கல் செய்யப்படும்

மனித உரிமைகள் ஆணையம் அமைக்கப்பட்டு 19 ஆண்டுகள் ஆகின்றன. ஒவ்வோர் ஆண்டும் அது நாடாளுமன்றத்துக்காக அறிக்கை தயாரிக்கும். ஆனால், அது நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டதில்லை.

நாளை சுஹாகாம் அறிக்கை முதல்முறையாக மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு விவாதிக்கப்படவுள்ளது. பிரதமர்துறை அமைச்சர் லியு வூய் கியோங் அதைத் தாக்கல் செய்வார் என்று தெரிகிறது.