முன்னாள் ஐஜிபி: அமைதி ஒப்பந்தத்தைக் கொண்டாடுவதில் தவறில்லை, கம்முனிசத்துக்குப் புத்துயிர் கொடுப்பது தவறு

ஹட்ஜாய் அமைதி ஒப்பந்தத்தை நினைவுகூர்வது அல்லது கொண்டாடுவது தவறில்லை என்கிறார் போலீஸ்படை முன்னாள் தலைவர் அப்துல் ரகிம் நூர்.

“30ஆண்டுகளுக்குமுன் அரசாங்கம் ஹாட்ஜாய் அமைதி ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட நிகழ்வை அல்லது வரலாற்றுச் சிறப்புமிக்க அத் தருணத்தை நினைவுகூர விரும்பினால் அது தவறல்ல.

“அதைக் கம்முனிஸ்டுகளுடனான பிரச்னைக்குத் தீர்வு காணப்பட்டது, நாடு அமைதியாக இருக்கிறது என்பதற்கு நன்றி நவிலும் அடயாளமாகக்கூட கருதலாம்”, என்று ரகிம் சொன்னதாக சினார் ஹரப்பான் செய்தி கூறியது.

ஆனால், அது கம்முனிசத்தை மீண்டும் உயிர்ப்பிக்கும் முயற்சியாக இருக்குமானால், போலீஸ் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றவர் வலியுறுத்தினார்.