அம்னோ கொல்லைப்புற வழியில் அரசாங்கம் அமைக்க முயலாது- ஜாஹிட்

அம்னோ தலைவர் அஹமட் ஜாஹிட் ஹமிடி, பக்கத்தான் ஹரப்பான் கட்சிகளுடன் கைகோத்து பின்வாசல் வழியாக அரசாங்கம் அமைக்கும் முயற்சியில் அம்னோ மற்றும் பிஎன் ஒருபோதும் ஈடுபடாது என்பதை மீண்டும் வலியுறுத்தினார்.

இன்று காலை அம்னோ பேரவைக் கூட்டத்தில் இதனை வலியுறுத்தி அவர், பாஸுடன் சேர்ந்து உருவாக்கப்பட்டுள்ள முவாஃபக்காட் நேசனல் மூலமாக வலுவான எதிர்க்கட்சியாக திகழ்வதே தங்களின் நோக்கம் என்றார்.

“பின் வாசல் வழி அரசாங்கத்தை மாற்றி அமைக்க நாங்கள் கனவு கண்டதில்லை- அதற்கான வாய்ப்பு இருந்தும்கூட.

“முன்வாசல், பின்வாசல் இரண்டுமே திறந்திருந்தாலும் நாங்கள் முன்வாசலையே தேர்ந்தெடுப்போம்”, என்று அம்னோ தலைவர் குறிப்பிட்டார்.