பணத்துக்காக அமைச்சர்களிடம் கை ஏந்துவதா: எம்பிகளைச் சாடினார் அம்னோ பேராளர்

அம்னோ பொதுப்பேரவை   இன்றைய பேரவைக் கூட்டத்தில் அம்னோ பேராளர் ஒருவர் நிதி ஒதுக்கீடு கேட்டு அமைச்சர்களிடம் கை ஏந்திய அம்னோ எம்பிகளைச் சாடினார்.

அவர்கள் கரையான்கள் போன்றவர்கள் என்று அம்னோ புக்கிட் குளுகோர் பேராளர் ஒமார் ஃபவுட்சார் காட்டமாகக் கூறினார்.

“அம்னோவுக்கு அப்படிப்பட்ட கரையான்கள் தேவையில்லை. அவர்கள் கட்சியை அரித்து விடுவார்கள்”, என்றவர் கட்சித் தலைவரின் கொள்கை உரைமீதான விவாதத்தின்போது கூறினார்.

“ஏழு பேர் நிதி உதவி கேட்கச் சென்றதாகக் கூறப்பட்டுள்ளது. நாம் எதிர்க்கட்சியாகி 18 மாதங்கள்தான் ஆகின்றன.

“பிகேஆர், பாஸ் ஆகியவை எத்தனையோ ஆண்டுகளாக எதிர்க்கட்சிகளாக இருந்துள்ளன. அவர்கள் அம்னோவிடம் உதவி கேட்டு வந்ததில்லையே”, என்றார் கூறினார்.

பணம் தேவை என்றால் கட்சி அடிநிலை உறுப்பினர்களிடம் கேளுங்கள் அவர்கள் உதவுவார்கள் என்றாரவர்.