அன்வார் இப்ராகிம்மீதான சத்திய பிரமாணத்தை புலனாய்வு செய்க: போலீசுக்கு யூசுப் ராவுத்தர் வலியுறுத்து

பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் தன்னிடம் பாலியல் நீதியில் தகாத முறையில் நடந்துகொண்டதாகக் குற்றஞ்சாட்டிய அவரின் முன்னாள் உதவியாளர், அச்சம்பவத்தை விவரமாக விவரித்து தான் செய்த சத்திய பிரமாணத்தைப் போலீஸ் ஆய்வு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

அதன் தொடர்பில் முகம்மட் யூசுப் ராவுத்தர் இன்று செந்தூல் மாவட்ட போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

போலீஸ் தன்னுடைய சத்திய பிரமாணத்தை நன்கு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காகவே அப்புகார் செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

“என்னுடைய பாதுகாப்புக்கு மிரட்டல் ஏற்பட்டுள்ளது”, என்றாரவர்.

அன்வாரின் முன்னாள் ஆய்வு அதிகாரியான யூசுப்,26, கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு சத்திய பிரமாணம் செய்தார். அதில் அன்வார் தனக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறினார்.