பிகேஆர் காங்கிரஸ் இறுதி நாளில் அஸ்மினையும் அவரின் ஆதரவாளர்களையும் காணோம்

இன்றைய பிகேஆர் காங்கிரஸின் இறுதிநாள் கூட்டம் பல தலைவர்கள் இல்லாமலேயே தொடங்கியது.

துணைத் தலைவர் அஸ்மின் அலி, உதவித் தலைவர் சுரைடா கமருடின், மகளிர் பிரிவுத் தலைவர் ஹனிசா தல்ஹா ஆகியோரும் அஸ்மின் ஆதரவாளர்களான உச்சமன்ற உறுப்பினர் பலரும் கூட்டத்துக்கு வரவில்லை.

நேற்று அஸ்மின் ஆதரவாளர்கள் பேராளர் கூட்டத்திலிருந்து வெளிநடப்புச் செய்தபோதே இன்றைய கூட்டத்துக்கு அவர்கள் வர மாட்டார்கள் என்பது எதிர்பார்க்கப்பட்டதே.

காலை மணி 9க்குத் தலைவர் அன்வார் இப்ராகிம் வந்தபோது பாதி மண்டபம் காலியாகவே இருந்தது.

அதன் பின்னரே மனடபம் நிரம்பியது. கூட்டமும் தொடங்கியது.

பிகேஆர் காங்கிரஸ் இன்று பிற்பகல் இரண்டு மணிக்கு முடிவடையும்.