குவான் எங்: ஆவி வாக்காளர்கள் என்று கூறி இன உணர்வைத் தூண்டி விடுகிறார்கள்

கடந்த பொதுத் தேர்தலில் டிஏபி ஆவி வாக்காளர்களைப் பயன்படுத்தி அம்னோவைத் தோற்கடித்ததாக ஒமார் ஃபவிட்சார் கூறியிருப்பது இன உணர்வுகளைத் தூண்டிவிடும் ஒரு முயற்சி என டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் இன்று கூறினார்.

“அது ஒரு தீய நோக்கம் கொண்ட குற்றச்சாட்டு. இன உணர்வுகளைத் தூண்டிவிடுவதற்காக சொல்லப்பட்டது. அதில் உண்மை இல்லை”, என்றாரவர்.

அது குறித்து டிஏபி கட்சியினர் போலீஸ் புகார் செய்யத் தொடங்கியியுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.