செல்வாக்கு மிக்கவர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகள் திரும்பவும் பரிசீலிக்கப்படலாம்- எம்ஏசிசி

மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) மூடப்பட்ட பல கோப்புகளைக் குறிப்பாக செல்வாக்கு மிக்கவர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளத் திரும்பவும் பரிசீலனை செய்யக்கூடும் என எம்ஏசிசி தலைமை ஆணையர் லத்திபா கோயா கூறினார்.

பழைய வழக்குகளைத் திரும்பவும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கோரி மகஜர்கள் வந்திருப்பதாக லத்தீபா கூறினார்.

“வழக்கு தொடுக்க முகாந்திரங்கள் இருந்தும்கூட சில கோப்புகள் மூடப்பட்டது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை”, என்றாரவர்.

கடந்த ஆண்டு தொடுக்கப்பட்ட வழக்குகள்கூட கைவிடப்ப்ட்டுள்ளன.

ஆனால், அது குறித்து விவரிக்க அவர் மறுத்தார். விவரங்களை வெளியிடுவது விசாரணைக்குத் தடையாக இருக்கும்.

சம்பந்தப்பட்டவர்கள் தப்பி ஓடிவிடலாம், கோப்புகள் “மாயமாகும்” அபாயமும் உண்டு என்றாரவர்.