பினாங்கு டிஏபி மாநாட்டில் அனல் பறக்கும் வாதங்கள் எதிர்பாக்கப்படுகின்றன

நாளை பட்டர்வர்தில் பினாங்கு டிஎபி ஆண்டுக் கூட்டம் நடைபெறுகிறது. டிஏபி அதன் ஆதரவாளர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யவில்லை என்ற குறைகூறல்கள் பெருகி வரும் நேரத்தில் ஆண்டுக் கூட்டம் நடைபெறுவதால் பேராளர்கள் பல பிரச்னைகளை முன்வைக்கலாம், அவை சூடான விவாதங்களுக்கு இட்டுச் செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சோஸ்மா சட்டத்தின்கீழ் டிஏபி கட்சியினரே பிடித்து வைக்கப்பட்டிருப்பது, தாய்மொழிப் பள்ளிகளில் ஜாவி எழுத்து கற்பிக்கும் முடிவு, மசீச-வுக்குச் சொந்தமான துங்கு அப்துல் பல்கலைக்கழகக் கல்லூரிக்கான நிதி குறைக்கப்பட்டிருப்பது முதலிய விவகாரங்கள் டிஏபி உறுப்பினரிடையே மிகுந்த அதிருப்தியை உண்டுபண்ணியுள்ளன.

பினாங்கு டிஏபி செயலாளர் லிம் ஹுய் இங், உறுப்பினர்கள் ஆண்டுக்கூட்டத்தை ஒரு குடும்ப நிகழ்வுபோல் கருதி நடந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்..

உறுப்பினர்களுக்கு தங்கள் கருத்துகளை எடுத்துரைக்க போதுமான நேரம் ஒதுக்கப்படும் என்றும் ஒரு செனட்டருமான ஹுய் இங் கூறினார்..