மூவார் ஆற்று நீரில் மாசு : 35ஆயிரம் வீடுகள் பாதிப்பு

மூவார் ஆற்றில் அம்மோனியா மிகுந்த அளவு கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து 35 ஆயிரம் வீடுகளுக்குக் குடிநீர் விநியோகம் தடைப்பட்டது.

9 மாதங்களுக்கு முன்னர் பாசிர் கூடாங் சுங்கை கிம் கிம்-மில் கடும் மாசுபாடு ஏற்பட்டு குடிநீர் விநியோகம் தடைப்பட்டது நினைவிருக்கலாம். இப்போது மூவாரில்.

இப்பிரச்னைக்கு முடிவுகாண ஜோகூர் நீர் மேலாண்மை நிறுவனமும்(பகாஜ்) , நீர் விநியோக நிறுவனமான ரன்ஹில் எஸ்ஏஜே-யும் இன்று பிற்பகல் கூட்டம் நடத்துவதாக மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் (எக்ஸ்கோ) ஜிம்மி புவா வீ ட்சே ஹி கூறினார்.

ஆற்று நீரில் மாசு கலந்திருப்பது நேற்றுத்தான் கண்டுபிடிக்கப்பட்டது என்றும் மாசு கலந்தது எப்படி என்பதை மாநில அரசு ஆராய்ந்து வ்ருகிறது என்றும் அவர் சொன்னார்.

நீர் விநியோகத் தடையினால் பெக்கான் பக்ரி, பக்ரி புதுக் கிராமம், பாரிட் ஹாஜ் சின், பாரிட் ஹாஜ் நோர், ஜாலான் ஆயர் ஈத்தாம் முதலியவை பாதிக்கப்பட்டுள்ளன.

பெர்னாமா