மஸ்லி பதவி விலகலா?

கல்வி அமைச்சர் மஸ்லி மாலிக் புத்ரா ஜெயாவில் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டைச் சந்திக்கச் சென்றுள்ளார்.

அச்சந்திப்பு பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக தெரிவித்த அரசாங்க வட்டாரமொன்று அதற்குமேல் எதுவும் சொல்லவில்லை.

“சந்திப்பு நடப்பதை மட்டுமே உறுதிப்படுத்த முடியும். மற்ற விவரங்கள் தருவதற்கில்லை”, என்றந்த வட்டாரம் மலேசியாகினியிடம் தெரிவித்தது.

மஸ்லி தானாக பதவி விலகலாம் அல்லது அமைச்சரவையிலிருந்து தூக்கப்படலாம் என்று வதந்திகள் பெருகிவரும் வேளையில் இச்சந்திப்பு நடைபெறுகிறது.

மலேசியாகினி அமைச்சரின் பத்திரிகைச் செயலாளர் சுல் பிக்ரி ஸாமிரையும் அரசியல் செயலாளர் மகமட் காசிமையும் தொடர்புகொண்டு விசாரித்தது.

சுல் பிக்ரி பதில் அளிக்கவில்லை. மகமுட் புத்ரா ஜெயாவில் கல்வி அமைச்சில் மாலை மணி 4.30க்குச் செய்தியாளர் கூட்டம் நடப்பதாகவும் அங்கு வருமாறும் கூறினார்.