2,029 வாக்குகள் பெரும்பான்மையால் பாரிசான் வென்ற கிமானிஸ் இடைத்தேர்தலில், மக்களின் தீர்ப்பை பக்காத்தான் ஹராப்பன் ஏற்றுக் கொள்கிறது என்று நிதியமைச்சர் லிம் குவான் எங் கூறினார்.
தோல்வியுற்ற போதிலும், சபாவின் அமைச்சராக ஷாஃபி அப்டாலை டி.ஏ.பி. தொடர்ந்து ஆதரிக்கும் என்று லிம் கூறினார்.
“ஷாஃபி மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து ஹராப்பன் பிரதிநிதிகளும் கடினமாக உழைப்பார்கள் என்று நான் நம்புகிறேன். இது நாட்டின் அனைத்து அரசியல் பிரதிநிதிகளுக்கும் பொருந்தும். அவர்கள் மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய கடினமாக உழைக்க வேண்டும்” என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.