பினாங்கு பாயான் லெப்பாஸ் தமிழ்ப்பள்ளிக்கு வாழ்த்துகள்!

பினாங்கு பாயான் லெப்பாஸ் தமிழ்ப்பள்ளி ஐ.நா. இலக்குகளுக்கு ஏற்ப பொங்கலைக் கொண்டாடியுள்ளது.

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்களை கல்வி அமைச்சின் சுற்றறிக்கை ஓரளவு குறைத்துவிட்டது. இந்து பாரம்பரியத்தில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்று அந்த சுற்றறிக்கை முஸ்லிம் மாணவர்களுக்கு அறிவுறுத்தியிருந்தது.

இருப்பினும், பினாங்கின் பாயான் லெப்பாஸ் தமிழ்ப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு. சங்கா சின்னையா இந்த ஆண்டு பொங்கல் திருநாளை, பல இன மக்களை ஒருங்கிணைக்கும் ஒரு இன்பமான விழாவாக ஏற்பாடு செய்து வெற்றியாக்கியது அனைவருக்கும் பெருமை சேர்க்கும்படி அமைந்தது.

எதிர்வரும் சீனப்பெருநாளை முன்னிட்டு, இன்று, அப்பள்ளி மாணவர்கள் சிவப்பு வண்ண ஆடை அணிந்து கொண்டாடினர். பல்லின மக்களின் கலாச்சாரங்களுக்கு மரியாதை அளிப்பதன் அவசியத்தை விதைக்கும் முயற்சியாக இந்நிகழ்வு அமைந்துள்ளது.

திரு. சங்கா சின்னையாவின் பல ஆக்ககரமான நிகழ்ச்சிகளுக்கும் முயற்சிகளுக்கும் பாராட்டுகள் குவிந்த வண்ணமே இருக்கின்றன. வாழ்த்துகள்!